11. குங்கிலியக் கலய நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 11
இறைவன்: அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அபிராமியம்மை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : திருக்கடவூர்
முக்தி தலம் : திருக்கடவூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி - மூலம்
வரலாறு : சோழ நாட்டில் திருக்கடவூர் என்னும் தலத்தில் வேதியர் குலத்தில் அவதாரம் செய்தார். அத்தலத்து இறைவருக்குத் தினமும் குங்கிலியத் தூபம் இடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இறையருளால் வறுமை வந்துற குடும்பம் பசியால் வாடியது. அந்நிலையிலும் தம் பணியை விடாது தொடர்ந்தார். ஒரு நாள் துணைவியார் தம் தாலியினைக் கழற்றிக் கொடுத்து அரிசி முதலியவைகளை வாங்கி வருமாறு அனுப்பினார். நாயனார் வீதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே குங்கிலியப் பொதி கொண்டு வருவதைக் கண்டார். அக்குங்கிலியம் இறைவருக்கு ஆகும் என நினைத்து தாலியைக் கொடுத்து அதற்கு ஈடாக குங்கிலியம் பெற்று அதனைக் கோயில் பண்டாரத்தில் சேர்த்து அங்கேயே தூங்கினார். பசியால் மனைவியும் மக்களும் வீட்டில் வருந்தி தூங்கினர். இறைவன் நாயனாரது வீட்டில் நெல்லும் பொன்னும் குவித்து அசரீரியாக நாயனாரை வீட்டிற்குச் சென்று பசியாறுக என்று பணித்தார். வீட்டிற்கு வந்த நாயனார் அங்கே நெல்லும் பொன்னும் மணியும் நிறைந்திருக்கக் கண்டார். இறைவன் கருணையை எண்ணி வியந்து போற்றினார். அக்காலத்தே திருப்பனந்தாளில் சிவலிங்கம் தாடகை என்னும் ஒரு பெண் அடியார் பொருட்டு சாய்ந்திருந்தது. அதனை நிமிரச் செய்ய அரசன் யானை, குதிரைகளைப் பயன்படுத்தியும் இயலாமல் போனது. இதனைக் கேள்வியுற்ற நாயனார் தமது கழுத்தில் கயிறு பூட்டி இழுக்க சிவல்ங்கம் நிமிர்ந்தது. திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் ஆகியோருக்கு அமுது செய்வித்தார்.
முகவரி : அருள்மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் – 609311 மயிலாடுதுறை வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04364-287429

இருப்பிட வரைபடம்


ஆறு செஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கான 
நாறுகுங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல 
பேறு மற்றிதன் மேல் உண்டோ பெறாப்பேறு பெற்று வைத்து 
வேறினிக் கொள்வது என் என்று உரைத்தெழும் விருப்பின் மிக்கார்

- பெ.பு. 846
பாடல் கேளுங்கள்
 ஆறு செஞ்சடை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க